இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் சிங்கராஜ் தலைமையில். உதவி செயற் பொறியாளர் சிவகாமி .மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார். வசந்தகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது
முன்னதாக இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு வெள்ளையடிக்கப் பட்டு கலர் வர்ணங்கள் பூசப்பட்டு ஊழியர்கள் கலர் கோலமிட்டு பொங்கலை கொண்டாடினர். அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் கூறிக்கொண்டு கரும்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந் தலைவர் துரைகற்பகராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.