இராஜபாளையத்தில் ஆ.ராசாவை கைது செய்ய அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்
திமுக எம்.பி ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இராஜபாளையம் காந்தி சிலை பகுதியில் திமுக அ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி 500 மேற்பட்ட அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அதிமுக மகளிர் அணி சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ. ராசாவை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மாவட்ட இணைசெயலாளர் அழகு ராணி, தலைமையில் நகர - ஒன்றிய மகளிரணி செயலாளர்கள் ராணி, லீலா ஆகியோர் முன்னிலையில் 500 மேற்பட்ட பெண்கள் இணைந்து ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவினர் தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசி வருவதாகவும், ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை பெற்று வந்த திமுக வினருக்கு என்ன தகுதி உள்ளது என பெண்கள் ஆவேசமாக கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.