இராஜபாளையத்தில் அதிக ஜம்பிங் ஜாக்ஸ் (MOST JUMBING JACKS) செய்து இளைஞர் சாதனை
இராஜபாளையத்தில் அதிக ஜம்பிங் ஜாக்ஸ் (MOST JUMBING JACKS) செய்து இளைஞர் இத்தாலி கலைஞரின் சாதனை முறியடித்து உலக சாதனை;
அதிகமுறை ஜம்ப் செய்து உலக சாதனை செய்த ராஜபாளையம் இளைஞர்
இராஜபாளையம் இளைஞர் அதிக ஜம்பிங் ஜாக்ஸ் (MOST JUMBING JACKS) செய்து இத்தாலி கலைஞரின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் ( 23 )என்ற வாலிபர் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்து நோபல் சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து தற்போது அதிக ஜம்பிங் ஜாக்ஸ் சாதனை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் தொடர்ந்து பயிற்சி செய்து வந்துள்ளார்.
இதையடுத்து இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ஒரு மணி நேரத்தில் 3873 முறை அதிக ஜம்பிங் ஜாக் செய்துள்ளார். இவர் சாதனையை முறியடிக்கும் நோக்கத்தில் ஐயப்பன் ஒரு மணி நேரத்தில் 4483 முறை அதிவேகமாக ஜம்பிங் ஜாக் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
இவரை, கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு தனக்கு உதவி செய்தால் இது போன்று பல சாதனைகள் செய்து தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன் என சாதனை படைத்த இளைஞர் ஐயப்பன் தெரிவித்தார்.