இசை வாத்திய கலைஞர்கள் இசையமைத்து கோரிக்கை..

இசை வாத்திய கலைஞர்கள்

Update: 2021-05-10 01:18 GMT

இராஜபாளையம் பகுதியில் வேலையின்றி தவிக்கும் இசைக்கலைஞர்களுக்கு உதவ கோரி தமிழக அரசுக்கு இசை வாத்திய கலைஞர்கள் இசைத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், பேண்ட் சேட், நாதஸ்வரம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.பின்னர் தேர்தல் நேரங்களில் மீண்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது அலையான கொரோனா தொற்றினால் ஊரடங்கு அறிவித்துள்ளதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பங்குனி சித்திரையில்.துவங்கி சுமார் 6 மாத காலம் அதிகளவில் திருவிழா நடைபெறும் என்பதால் இந்த 6 மாத கால சீசனை நம்பியே தங்களது வாழ்வாதாரம் உள்ளதாகவும் ஆனால் சீசன் நேரத்தில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கிடைத்த ஆர்டர்கள் அனைத்தும் ரத்தானதால் கடும் சிரமங்களை சந்திப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தடையின்றி தங்கள் தொழில் நடத்த தமிழக முதலமைச்சர் உத்தரவிடவேண்டும், அல்லது உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 100 கணக்கான இசைக் கலைஞர்கள் இசை வாத்தியங்களை இசைத்து தங்களுடைய கோரிக்கையை தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News