ராஜபாளையம் அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து சேதம்
ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டி பகுதியில் உள்ள காலனி வீட்டின் மேற்கூரை பெயர்ந்து சேதம். அப்பகுயில் வசிக்கும் பொதுமக்கள் அவதி.;
ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டி பகுதியில் உள்ள காலனி வீட்டின் மேற்கூரை பெயர்ந்து சேதம். அப்பகுயில் வசிக்கும் பொதுமக்கள் அவதி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டி கிராமத்தில் அரசு கட்டி கொடுத்த 25 க்கும் மேற்பட்ட வீடுகளில் குடும்பத்துடன் ஏழை, எளிய அப்பகுதிமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பல வீடுகளின் மேற்கூரை பெயர்ந்தும், சுவர்களில் கீரல் விழுந்தும் காணப்படுகிறது.
மேலும் தற்போது பெய்த மழையினால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைவேலு என்பவரின் வீட்டின் மேற்கூரை நேற்றிரவு பெயர்ந்து விழுந்துள்ளது. அதர்ஷடவசமாக தம்பதியினர் மற்றும் 2 குழந்தைகள் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர்.
மேலும் இப்பகுதி மக்கள் கூறும் போது நாங்கள் கிடைக்கும் கூலி வேலை செய்து தங்களது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். ஏழ்மையான சூழலை அறிந்து அரசு காலணி வீடு வழங்கியுள்ளது. ஆனால் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும், அரசினால் வழங்கப்பட்ட வீடுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பயனில்லை.
தற்போதுள்ள தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து காலணி வீடுகளை சீரமைத்து தர வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.