ராஜபாளையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி துவக்கம்
ராஜபாளையம் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியது.;
ராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 42 வார்டுகளில் உள்ள மொத்தம் 128 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு மின்னனு இயந்திரங்கள் அனுப்பும் பணி தேர்தல் அதிகாரி சுந்தரம்மாள் தலைமையில் அனுப்பப்பட்டது.
பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் அனுப்பபட்டது. மேலும் 128 வாக்குச்சாவடிகளில் 700 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.