மணல் திருட்டை தட்டிக்கேட்ட மாவட்ட பெண் கவுன்சிலர் மீது கொலை முயற்சி: 4 பேர் கைது
இராஜபாளையம் அருகே மணல் திருட்டை தட்டிக்கேட்ட மாவட்ட கவுன்சிலர் மீது கொலை முயற்சி தாக்குதல். போலிசார் விசாரணை.
இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் மணல் திருட்டை தட்டிக்கேட்ட மாவட்ட கவுன்சிலருக்கு கொலை முயற்சி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேத்தூர் ஊரக போலிசார் விசாரணை
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் வனப்பகுதியில் மணல் திருட்டு அதிகமாக நடைபெற்று வருவதாகவும் அப்போது மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது போலீசாரும் வருவாய்த் துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சுந்தரராஜபுரம் பகுதியில் முத்துசாமி என்பவர் விவசாய நிலத்தின் வழியாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதை தட்டிக் கேட்டுள்ளார். அவர்கள் அதற்கு முத்துச்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் முத்துசாமி புகார் அளித்துள்ளார். புகார் அளித்துவிட்டு காவல் நிலையத்தின் அருகே நின்று கொண்டிருந்த போது சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் முனியாண்டி (35) இரண்டாவது மகன் முனீஸ்வரன் (32) இருவரும் முத்துசாமியை கம்பால் அடித்துள்ளனர். முத்துசாமியின் மகள் முத்துச்செல்வி மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவர் அருகே நின்று கொண்டிருந்த போது முனியாண்டி தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக அவர் மீது மோதி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் முத்து செல்விக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, முனியாண்டி மனைவி தமிழ்செல்வி. மூனிஸ்வரன் மற்றும் மூனிஸ்வரன் மனைவி கல்பான ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் திருட்டை தடுக்க முயன்ற மாவட்ட கவுன்சிலருக்கு கொலை முயற்சி நடந்தது அப்பகுதியில் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.