இராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
இராஜபாளையத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து உற்சாக வாக்கு சேகரிப்பு.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்தலை முன்னிட்டு அஇஅதிமுக வேட்பாளர்கள் 42 வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 வது வார்டு உறுப்பினராக போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் சுசிலா முருகேசன் கூரைப் பிள்ளையார் கோவில் பகுதி, திருவள்ளுவர் தெரு, திளெரதியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து நான் வெற்றிபெற்ற உடன் 16வது வார்டு பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் செய்து தருவேன் என கூறி இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார்.
32 வது வார்டு உறுப்பினராக போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் அழகுராணி தேர்தல் பணி அலுவலகம் திறந்து வைத்து, வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் 32வது வார்டு பகுதியில் கழிவு நீர் கால்வாய் வசதி மற்றும் சாலை வசதிகள் நான் கவுன்சிலராக வெற்றிபெற்ற உடன் விரைவில் செய்து தருவேன் என உறுதியளித்தார்.