இராஜபாளையம் பகுதியில் வெறி நாய் கடித்து 8 பேர் காயம்: பொதுமக்கள் பீதி

இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் வெறி பிடித்து அப்பகுதி மக்களை கடித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-02-05 02:30 GMT

இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் ஒன்று ரோட்டில் சென்ற பொது மக்களை விரட்டி விரட்டி கடித்ததில் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் வெறி பிடித்து அப்பகுதி மக்களை கடித்ததில் 8 பேர் காயம். நகராட்சி நிர்வாகம் தெருநாய் களுக்கு வெறிநோய் தடுப்பூசி பல ஆண்டுகளாக அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டு .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பலர் வளர்ப்பு பிராணிகளாக நாய்கள் வளர்க்கின்றனர். சிலர் சரியான கண்காணிப்பு இல்லாமல் நாய்களை தெருக்களில் சுற்ற விடுகின்றனர். தற்போது நகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுவதுடன், வாகன ஒட்டிகள் நாய்களால் விபத்துகளில் சிக்குகின்றனர்.

இந்நிலையில் இன்று இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் ஒன்று ரோட்டில் சென்ற பொது மக்களை விரட்டி விரட்டி கடிக்க துவங்கியது. இந்த வெறிநாய் கடியில் ஒரே குடும்பத்தில் தாய் மகன் உட்பட 8 பேர் காயமடைந்து இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, இராஜபாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும், இதனை கட்டுபடுத்தும் நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக தடுப்பூசி செலுத்த எவ்வித நடவடிக்கை எடுக்காததால் தெரு நாய்கள் வெறி பிடித்து மக்களை கடித்து வருகின்றது என தெரிவித்தனர். மேலும் சில நாய்கள் நோய் ஏற்பட்டு நோய் பரப்பும் விதமாக சுற்றி வருவதாக பொதுமக்கள் குற்றசாட்டு கூறுகின்றனர்.

Tags:    

Similar News