ராஜபாளையத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ராஜபாளையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1.50 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-02-15 06:53 GMT

ராஜபாளையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1.5௦ லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம்| பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி DSOராமநாதன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த காரில் சோதனை செய்த போது பொன்னகரம் பகுதியை சேர்ந்த சீனிவாசகன் என்பவர் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது பணத்தை

பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் வசம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News