இராஜபாளையத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.24 லட்சம் பறிமுதல்
இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.24 லட்சம் பறிமுதல்.
இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 42 வார்டுகளுக்கும் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அதன் ஒரு பகுதியாக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை எண் 2. தேர்தல் அதிகாரி இராமநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலத்திலிருந்து வெங்காயம் ஏற்றி வந்து தென்காசி மாவட்டம் சுரண்டையில் விற்பனை செய்துவிட்டு திருச்சி முசிறி பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் திரும்பி வந்தபோது அவருடைய மகேந்திரா பொலிரோ வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் இருந்ததை பறக்கும் படைகள் அதிகாரிகள் பறிமுதல் செய்து இராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாளிடம் ஒப்படைத்தனர்.