கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் - கடைபிடிக்காத2 கடைகளுக்கு சீல்;

2 சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 10 கடைகள் ;

Update: 2021-05-14 07:59 GMT

 ராஜபாளையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்காமல் செயல்பட்ட 2 சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்காமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு சூப்பர் மார்க்கெட்டுகள், ஒரு செல்போன் கடை மற்றும் ஏழு தேநீர் கடைகளை பூட்டிய நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையிலான அதிகாரிகள் 10 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

மேலும் அனைத்து கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து 8 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது  

Tags:    

Similar News