மாற்றுத்திறனாளி - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 - வரைவோலை.
கை கால்கள் செயல்படாவிட்டாலும் அந்த மனசு இருக்குல்ல- அதான் சார் கடவுள்..;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இரு கை கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 - வரைவோலை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கலங்காப்பேரி இந்திரா காலனியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கவினேஷ் வயது 16. இவருக்கு பிறவியிலேயே இரு இரு கைகள் மற்றும் இரு கால்கள் செயலிழந்த நிலையில் இவருக்கு மாதம் மாற்றுத்திறனாளிக்கான ஓய்வு ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ. 12,000- வழங்க வங்கியின் வரைவோலை எடுத்தார். இதுகுறித்து ராஜபாளையம் வட்டாட்சியர் ரங்கநாதனுக்கு தகவல் கொடுத்தார். ராஜபாளையம் வட்டாட்சியர் ரங்கநாதன் கலங்காப்பேரி கிராமத்திற்கு நேரில் வந்து கவினேஷ்டமிருந்து ரூ. 12,000- வங்கி வரைவோலை பெற்றுக் கொண்டார்.