கொரோனா நிதி வழங்கிய 6 ம் வகுப்பு மாணவன்.

தமிழக அரசிற்காக உதவி செய்வதில் என்னுடைய பங்கு இருக்கணும்.;

Update: 2021-05-16 10:20 GMT

ராஜபாளையத்தில் சைக்கிள் வாங்க சேர்த்த 1000 ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக 6 ம் வகுப்பு மாணவன் வழங்கியுள்ளான்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - கனகா தம்பதியரின் மூத்த மகன் நிரஞ்சன் குமார் (வயது 12). ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் சிறுவயது முதல் சமூக ஈடுபாட்டில் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்துள்ளார். இவரது தந்தை கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாயாரின் அரவணைப்பில் ஏழ்மையான சூழலில் பள்ளிக்கு செல்லும் போது தனது தாய் கொடுக்கும் பணத்தை சேர்த்து வைத்து சொந்தமாக சைக்கிள் வாங்குவதற்காக சிறுக சிறுக உண்டியலில் பணம் சேமித்து வைத்துள்ளார்.

தற்பொழுது கொரோனோ பேரிடர் காலத்தில் தமிழக அரசிற்காக உதவி செய்வதில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை தமிழக முதல்வரின் கொரோனோ நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்து ராஜபாளையம் வட்டாட்சியர் ரங்கநாதனிடம் வழங்கினார்.


Similar News