ராஜபாளையம் -மாங்காய் பறித்துக்கொண்டிருந்த விவசாயியை கரடி கடித்தது.

கரடி நடமாட்டத்தை தடுக்க வனத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை.;

Update: 2021-05-21 13:43 GMT
ராஜபாளையம் -மாங்காய் பறித்துக்கொண்டிருந்த  விவசாயியை கரடி கடித்தது.

விவசாயியை கரடி கடித்து காயம்(மாதிரி படம்)

  • whatsapp icon

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்காய் பறித்துக்கொண்டிருந்த விவசாயி கரடி கடித்து  காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்தவனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்குப்பகுதியில் ஆதிபுத்திர அய்யனார் கோவில் பகுதியில் உள்ள தனது மாந்தோப்பில் கோபால் (வயது 60) என்ற விவசாயி மாங்காய் பறித்து கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த கரடி அவரை கடித்துவிட்டு தப்பியோடியது. இதில் தலை, தோள்பட்டை போன்ற இடங்களில் காயமடைந்த விவசாயி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

விவசாயிகளை அச்சுறுத்தி வரும் கரடி நடமாட்டத்தை தடுக்க வனத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News