விழுப்புரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுவை மாநில இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Update: 2022-01-22 13:25 GMT

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட புதுவை மாநிலத்தை சேர்ந்த காா்த்திகேயன்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் விசாரித்ததில், புதுவை மாநிலம், திருபுவனை பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (26) வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காா்த்திகேயன் மீது விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.காா்த்திகேயன் தொடா்ந்து இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க, அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த காா்த்திகேயனை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Tags:    

Similar News