விழுப்புரம் ரெட் கிராஸ் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் வழங்கல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பினர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரத்தை வழங்கினர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலையில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடியிடம் மருத்துவ பயன்பாட்டிற்கு இன்று வழங்கினர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.குந்தவிதேவி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா. நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.