விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சி, நகராட்சிகள் திமுக வசம்!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சி, ஏழு பேரூராட்சிகள் திமுக கூட்டணி வசமானது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், கடந்த 19-ந் தேதியன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 2,15,553 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இதன் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு தொடங்கி நடைபெற்றது. அதில் விழுப்புரம் திமுக-25, அதிமுக-7, காங்கிரஸ்-2, விசிக-2, சுயேட்சை 3,மமக-1, பாமக-௨; திண்டிவனம் திமுக-23, அதிமுக-4, பாமக-2, சுயேட்சை-3, விசிக-௧; கோட்டகுப்பம் திமுக 14, அதிமுக-3, சுயேட்சை-6, காங்கிரஸ்-1,சிபிஎம்-1, முஸ்லிம் லீக்-1,பாமக-1 ஆகிய. 3 நகராட்சிகளையும் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக கூட்டணி கைப்பற்றியது.
மேலும் அனந்தபுரம் திமுக-9, அதிமுக-5, சுயேட்சை-1, அரகண்டநல்லூர் திமுக-6, அதிமுக 4, காங்கிரஸ்-1, சுயேட்சை 1,செஞ்சி திமுக 17, அதிமுக 1, வளவனூர் திமுக 8, அதிமுக 2, சுயேட்சை-2, காங்கிரஸ்-1,அமமுக 1, தேமுதிக-1, விக்கிரவாண்டி திமுக-9, அதிமுக-3, சுயேட்சை-3, திருவெண்ணெய்நல்லூர் திமுக-9, சுயேட்சை-6 ஆகிய ஆறு பேரூராட்சிகளை திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியது. இதில் மரக்காணம் திமுக-8, அதிமுக-4, சுயேட்சை-5, பாமக-1 திமுக மரக்காணம் பேரூராட்சி திமுகவிற்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.