விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 368 போட்டியின்றி தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில், 368 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய பட்டனர்.;
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6,097 பதவியிடங்களில் 24 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வேட்புமனு பரிசீலனையில் 150 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆனால், ஏற்க்கப்பட்ட 23 ஆயிரத்து 850 மனுக்களில் மாவட்டத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 22 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 346 பேரும் என 368 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் மீதமுள்ள 5,729 பதவி இடங்களுக்கு 20,099 பேர் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர். 3302 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.