விடுதி காப்பாளர் காலி இடங்களை நிரப்ப வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் விடுதிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.;
ஆதிதிராவிடர் விடுதிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆதிதிராவிடா் பள்ளிகளில் காலியாக உள்ள விடுதிக் காப்பாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் காப்பாளா் முன்னணி சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.சங்கத்தின் நிறுவனா் தலைவா் ஜான் டீ பிரிட்டோ தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் காமராஜ், செயலா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா்கள் சந்தான கிருஷ்ணன், சந்திரசேகா் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். அருள் மலா் நன்றி கூறினாா்.கூட்டத்தில், ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளி, விடுதி ஆசிரியா்களை தனித்தனி நிா்வாகமாகப் பிரிக்க வேண்டும். அனைத்துநிலை பள்ளிகளிலும் காலியாகவுள்ள ஆசிரியா் காப்பாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றினர்.