விழுப்புரத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-09-29 14:52 GMT

விழுப்புரத்தில் மதுபாட்டில் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளி தென்னல் பகுதியில் மது விலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது அவ்வழியே வந்த லோடுகேரியரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் வாகனத்தில் 3 லட்சத்து, 88 ஆயிரம் மதிப்பிலான 7200 மதுபாட்டில்களை கடத்தி வந்த பிரவீன்குமார், ராஜ்குமார் ஆகிய இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் லோடு கேரியரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News