கனமழையில் போக்குவரத்து பாலம் சேதம்: ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் அருகே மழையால் சேதமடைந்த போக்குவரத்து பாலத்தை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அருகே பிடாகம் - அத்தியூர் திருவாதி செல்லும் சாலையில் நீர்வரத்து ஆழங்கால் வாய்க்கால் குறுக்கே அமைந்துள்ள பாலம் தொடர் மழையின் காரணமாக திடீரெனசேதமடைந்தது.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாத வகையில் மணல் மூட்டைகளை கொண்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.