கிராம சபை கூட்டத்தில் பாதியில் கிளம்பிய அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பாதியில் கிளம்பியதால் பரபரப்பானது.
இன்று காந்தி பிறந்த நாளையொட்டி கிராம சபை கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மற்றும் அரசு அதிகாரிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.
அப்போது கிராம மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி குறித்து சராமாரியாக கேள்வி கேட்டனர். தொடர்ந்து மக்கள் கேள்வி கேட்டதால் அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.