நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனுக்குடன் மாவட்ட சேமிப்பு கிடங்குகிற்கு எடுத்து செல்ல வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2021-07-02 12:20 GMT

விழுப்புரம் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்காமல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் மோகனை மரியாதை நிமித்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி சந்தித்து வாழ்த்து கூறினார். உடன் மாவட்ட செயலாளர் என். சுப்பிரமணியன், உறுப்பினர் பி.குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், ஆகியோர் உடன் இருந்தனர்,

அப்போது மாவட்ட ஆட்சியரிடம் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செயல்பாடு சம்பந்தமாக மனு கொடுத்தனர். அதில் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரும் நெல்லை ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், மாவட்டத்தில் திடீரென கனமழை பெய்வதால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருவதால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News