விழுப்புரத்தில் இன்று போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-06-28 08:27 GMT

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று போதை பழக்கத்தை தவிர்த்திடும் விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடும்  நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி பி.பூர்ணிமா கலந்து கொண்டு குறுந்தகட்டினை வெளியிட்டார். அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீநாதா பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து துவக்கிவைத்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர்.அ. இராஜசேகரன், தொழிலதிபர்கள் சாமிக்கண்ணு,குபேரன் உட்பட இப்பேரணியில் காவல்துறை, வருவாய்துறை, பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்(பொறுப்பு) காளிதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்கள் அர. செந்தில்குமார், இல. பெருமாள், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் முனைவர். ம பாபு செல்வதுரை ஆகியோர். கலந்து கொண்டனர்.

பேரணியில் விழுப்புரம் நகரத்திலுள்ள பள்ளிகள், மற்றும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணி பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்ட வளாக மைதானத்திலிருந்து சிக்னல் வரை பேரணி சென்று முடிவடைந்தது.

Tags:    

Similar News