அடைமழையிலும் விடாமல் கூட்டம் நடந்த மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதலே அடைமழை பெய்து வரும் நிலையில், விடாமல் நடைபெற்ற மாவட்ட ஊராட்சியின் முதல் சாதாரண கூட்டம்;
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களின் முதல் சாதாரண கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார்,
கூட்டத்தில், தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி நேர்தலை உரிய காலத்தில் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக கடமையினை ஆற்றிட வழி செய்து கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் பொன்முடி மற்றும் மஸ்தான் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்தும்,
அனைத்து அரசு நல திட்ட உதவிகள் பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டு வருவதற்கு அரசுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தும்
நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் ஏகமனதாக தலைவரையும், துணைத்தலைவரையும் தேர்ந்தெடுத்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கட்டுப்பாட்டில் கொண்டுவந்த விழுப்புரம்: மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மாவட்ட ஊராட்சி சார்பாக நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட ஊராட்சி மன்ற துணை சேர்மன் ஷீலா சேரன் உட்பட அனைத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அடைமழையிலும், விடாமல் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.