தலைவர்களின் உருவச்சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைவர்களின் உருவச்சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்;
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் திருவள்ளுவர் சிலையும், 2 இடங்களில் பாரதிதாசன் சிலையும், ஒரு இடத்தில் ஜவஹர்லால் நேரு சிலையும், 14 இடங்களில் மகாத்மா காந்தி சிலையும், 72 இடங்களில் அம்பேத்கர் சிலையும், 11 இடங்களில் தந்தை பெரியார் சிலையும், ஒரு இடத்தில் இந்திராகாந்தி சிலையும், 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலையும், 7 இடங்களில் காமராஜர் சிலையும், 27 இடங்களில் பேரறிஞர் அண்ணா சிலையும், 22 இடங்களில் எம்.ஜி.ஆர். சிலையும் அமைக்கபட்டுள்ளன.
இந்த தலைவர்களின் சிலைகளுக்கு ,பிறந்தநாள், நினைவு என ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே அழகுபடுத்தி, அலங்காரம் செய்து கொண்டா:டுவதோடு சரி. பின்னர் கண்டு கொள்வதில்லை. ஆண்டு முழுவதும் அந்த சிலைகளை காகங்களும், குருவிகளும் எச்சமிட்டு அலங்கோலபடுத்தி விடுகின்றன. தலைவர்களை கௌரவபடுத்த சிலை அமைக்கபட்டதின் நோக்கம் இங்கே அர்த்தமற்று வீணாக போவதை யாரும் உணரவில்லை.
பொது வாழ்க்கைக்கு தங்களை ஒப்படைத்து வாழ்ந்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது. தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவு நாளின்போது சிலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும்.மேலும் சமூக விரோதிகளால் சிலைகள் சேதம் ஏற்பட்டு பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கும் வகையில் சிலைகளுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என அந்த சிலைகளை தினந்தோறும் பார்த்து செல்லும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டில் சிலை அமைக்கப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு தற்போதைய நிலையில் அரசு தலைவர்களின் சிலைகள் அமைப்பதற்கு அனுமதிகள் வழங்கப்படுவதில்லை அதனால் தான் சிலைகள் அமைக்கப்படுவது தற்போது குறைந்து போய் விட்டது.இது ஒரு வகையில் நல்ல முடிவாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை செய்வது பெருமைக்குரியது என்கின்றனர் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.