சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவியை ஆட்சியர் மோகன் வழங்கினார்;

Update: 2021-08-26 12:43 GMT

சுயதொழில் தொடங்குவதற்கான கடனுதவியினை மாவட்ட ஆட்சியர் மோகன் பயனாளிக்கு வழங்கினா

விழுப்புரம்  தனியார் மகளிர் கல்லூரியில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் பெற்று சுய தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு முகாமில் நடைபெற்றது,

முகாமில் சுயதொழில் தொடங்குவதற்கான கடனுதவியினை மாவட்ட ஆட்சியர் மோகன் பயனாளிக்கு வழங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்  தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், இந்தியன் வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன இயக்குநர் அனிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News