விழுப்புரம் மாவட்டத்தில் விளம்பர பலகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அனுமதி பெறப்படாத அனைத்து வகை விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகள் உடனடியாக அகற்றபட வேண்டும், தவறும் பட்சத்தில் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.