பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து கலெக்டர் மோகன் பள்ளிகளுக்கு சென்று சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்

Update: 2021-09-01 15:59 GMT

பள்ளி கழிவறையை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று திடீரென பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று சுகாதார நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறைகள் சுத்தமாக உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது  விழுப்புரம் மாவட்ட பள்ளிகள் கண்காணிப்பு அலுவலர் முனைவர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News