100 சதவீத தடுப்பூசி விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 சதவீத தடுப்பூசி விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்

Update: 2021-08-24 12:11 GMT

விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை, மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்புசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை, மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கோடி, புதுச்சேரி மக்கள் தொடர்பு அலுவலக துணை இயக்குநர் முனைவர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News