திருவெண்ணெய் நல்லூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட சித்தலிங்கம் மடம் பகுதியில் போதைப் பொருட்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் திருக்கோவிலூர்-திருவெண்ணைநல்லூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சித்தலிங்கமடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த திருக்கோவிலூர் தெற்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சதீஷ் (வயது 55), சித்தலிங்கமடத்தை சேர்ந்த மண்ணப்பன் மகன் ராஜேந்திரன் (42) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், சதீஷ், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.