விழுப்புரம் மாவட்டத்தில் 252 ஊராட்சிளில் 100% பேர் தடுப்பூசி: கலெக்டர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் 252 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் 100 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்;

Update: 2022-01-10 12:00 GMT

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார். 

விழுப்புரம் மாவட்டத்தில்  252 கிராம ஊராட்சி மக்கள் நூறு சதம் மக்கள்  தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

கொரோனா மற்றும் ஒமைக்ரானை கட்டுப்படுத்தும் பேராயுதம் கொரோனா தடுப்பூசி என்பதால் தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசியும், முன்களப்பணியாளர்கள் கோவிட் முள்னெச்சரிக்கை பூஸ்ட் தடுப்பூசி (Precautions Dose) செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் இராதாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளர்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு கோவிட் முன்னெச்சரிக்கை தவணை ஊசி (Precautions Dose) செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் முன்னலையில்  (10.01.2022) தொடங்கி வைத்து பேசுகையில்,

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராதாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள், முன்களப் பணியளார்களுக்கு, இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் முன்னெச்சரிக்கை தவணை ஊசி (Precautions Dose) செலுத்தும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.11,862 சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களும், 20,443 முன்களப் பணியாளர்களும் மற்றும் 1,04,493 நபர்கள் 60 வயதிற்கு மேற்பட்டோரில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளோர்கள் கோவிட் முன்னெச்சரிக்கை தவணை ஊசி (Precautions Dase] செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர்.

இதுவரை, விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு 95.5 சதவீத மக்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 67.5 சதவீத மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் மற்றும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர் 66.9 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும், 252 கிராம பஞ்சாயத்துகளில் 100 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பேராயுதம் கொரோனா தடுப்பூசியாகும். ஆகவே, தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசியும், முன்களப்பணியாளர்கள் கோவிட் முன்னெச்சரிக்கை தடுப்பூசி (Precautions Dose) செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் கேட்டு கொண்டார். தொடர்ந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வுமேற்கொண்டு, படுக்கை வசதிகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்து மருத்துவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.

Tags:    

Similar News