பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவம் -காவல்துறை நடவடிக்கை.
மனித உரிமை மீறல்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் பட்டியலின சமூகத்தினரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் தகவல்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இந்த வில்லேஜில் கடந்த 12ஆம் தேதி தாழ்த்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் ஊர் மக்களை அழைத்து அங்கு கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை எல்லாம் எடுத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருட்களை மீட்டு வந்துட்டாய்ங்க..
இந்த நிலையில் தங்களை மீறி திருவிழா நடத்தியதாக கூறி தாழ்த்தப்பட்ட பகுதி மக்களை அழைத்து வரச் சொல்லி அவர்களை காலில் விழுந்து ஊர் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்காய்ங்க. அதன்படியே அந்த கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த திருமால், சந்தானம், ஆறுமுகம் ஆகியோர் ஊர்மக்கள் முன்னிலையில் காலில் விழுந்து இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது. நாம் ஒற்றுமையாக இருப்போம் எனக் கூறியதால் அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில் இதுகுறித்த வீடியோ வெள்ளிக்கிழமை (14ஆம் தேதி) சமூக தளத்தில் வைரலாக பரவியது,
இதையடுத்து இரு தரப்பினரும் தனித்தனியே திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும். மேலும் ஒரு தரப்பில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும், மற்றொரு தரப்பினர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதகவும், வேறு ஏதும் பிரச்சினை இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்,
இது போன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் இனிமேல் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றால் இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த மனித உரிமை மீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
#இன்ஸ்டாநியுஸ் #திருவெண்ணெய்நல்லூர் #Policeaction. #ஆய்வு #Instanews #tamilnadu #adult #police #விழுப்புரம் #தமிழ்நாடு #VILLUPURAM #village #cast #religion #case #punished