விக்கிரவாண்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி: சிபிஎம் கோரிக்கை

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கலைக்கல்லூரி வேண்டும் என சிபிஎம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

Update: 2021-11-29 14:56 GMT

கஞ்சனூரில் நடைபெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றிய 23-வது மாநாடு 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி கிழக்கு, மேற்கு ஆகிய இரு ஒன்றிய 23-வது மாநாடு கஞ்சனூரில் நடைபெற்றது, மாநாட்டிற்கு எஸ்.ரமேஷ், ஜெயா ஆகியோர் தலைமை தாங்கினர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆர்.தண்டபாணி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்,

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துகுமரன்  ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு வி.கிருஷ்ணராஜ், மேற்கு ஆர்.டி.முருகன்  மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், உறுப்பினர்கள்  ஏ.சங்கரன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சித்ரா ஆகியோர் உரையாற்றினர் 

மாநாட்டில் விக்கிரவாண்டி பகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும்,கல்வி கடன் வழங்க முகாம் நடத்த வேண்டும், அடிக்கடி விபத்து ஏற்படும் விக்கிரவாண்டி அண்ணா சிலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

தொடர்ந்து 9பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டு அதில் வி.கிருஷ்ணராஜ் ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

Similar News