விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி வாக்குபதிவு கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2021-10-06 04:59 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் 6-ந் தேதி புதன்கிழமை செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவை கலெக்டர் ஆய்வு செய்தார்,

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலருக்கு 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு 745 பேரும், 372 கிராம ஊராட்சித் தலைவருக்கு 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8,574 பேரும் என 3,297 பதவியிடங்களுக்கு 10 ஆயிரத்து 873 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான ஓட்டுப்பதிவு 1,569 ஓட்டுச்சாவடி மையங்களில் புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது, 

மாவட்ட கலெக்டர் மோகன் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவி கிராம ஊராட்சியில் அரசு நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்குசாவடி மையத்திற்கு நேரில் சென்று வாக்கு பதிவு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில்பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஒன்று தொரவி ஊராட்சி.  ஆனால் சுமார் 700 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள இங்கு தான் பதற்றம் ஏற்படும் வகையில் ஒரே அறைக்குள்  6,7 வார்டுகளை வாக்களிக்கும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர், அந்த ஒரே கதவு வழியாக இரு வார்டுகளின் ஆண், பெண் வாக்காளர்கள் இடைவெளி இல்லாமல் முண்டியடித்து கொண்டு வாக்கு அளிக்கும் நிலையும் அங்கு ஏற்பட்டு வருகிறது

Tags:    

Similar News