ராதாபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2021-10-02 16:29 GMT

விழிப்புணர்வு பிரச்சார பேரணியை தொடங்கி வைத்த கலெக்டர் த.மோகன் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,

விழிப்புணர்வு பிரச்சார பேரணியை  மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டர் த.மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  கிருஷ்ணப்ரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News