வேட்புமனு தாக்கல் ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணையில் வேட்புமனு தாக்கல் ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-09-14 10:02 GMT

வேட்புமனு தாக்கல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் - 2021 முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகிறது. 

பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும்,கலெக்டருமான த.மோகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மகளிர் திட்ட .பூ.காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர் ற்அரிதாஸ். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News