காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் மோகன் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திடீர் திடீரென பெய்து வரும் மழையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது என்பதை குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஷீனா, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.