கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு வாக்கு பெட்டிகள் அனுப்பும் பணி: கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் வாக்கு பெட்டி அனுப்பும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றிய பகுதிகளில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணியை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.