விழுப்புரம் அருகே காவலரை கட்டி போட்டு பள்ளியில் திருட்டு
விழுப்புரம் அருகே பேரங்கியூர் அரசுப்பள்ளி காவலரை மர்ம நபர்கள் தாக்கி, பள்ளியில் உள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் வாட்மேனை தாக்கி, கட்டிப்போட்டு கம்ப்யூட்டர் , லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்,
உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளியின் இரவு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.