முன்விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பாளையத்தில் வீட்டிற்கு தீ வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்;
முன் விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (38) . இவரும் இவரது தாய் சாந்தாவும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த குப்பன், ரவி, சின்னப்பொண்ணு ஆகியோர்களுக்கும் இவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், குப்பன், ரவி, சின்னப்பொண்ணு ஆகிய 3 பேரும் சேர்ந்து நேற்று சேகரின் வீட்டிற்கு சென்று சேகர் மற்றும் சேகரின் தாய் சாந்தாவையும் தகாத வார்த்தையால் திட்டி அவர்களை அடித்து உதைத்து அவர்கள் இருக்கும் வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தினர்.இந்த விபத்தில் வீடு முழுவதும் எரிந்தது. மேலும் வீட்டிலிருந்த ஒரு லட்சம் பணம் மற்றும் 4 லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
இது குறித்து சேகர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து, வீட்டை தீ வைத்து கொளுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.