அண்ணா பிறந்தநாள்: கண்டாச்சிபுரத்தில் திமுகவினர் கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் முகையூர் ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை கொண்டாடினர்.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுகவின் அறிவுறுத்தல்படி முகையூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அண்ணாதுரையின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து பிறந்தநாளை கொண்டாடினர். நிகழ்ச்சியில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.