கண்டாச்சிபுரம் அருகே பேருந்து பைக் மோதல்; ஒருவர் பலி
திருக்கோவிலூர் தொகுதி கண்டாச்சிபுரம் அருகே பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.;
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அய்யனார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில், மழவந்தாங்கல் கூட்ரோடு சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூரு சென்ற புதுவை அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார், அய்யனார் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த அய்யனாரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.