இரட்டை இலை சின்னம் முடக்கம் ஏன்? திண்டிவனத்தில் சசிகலா பரபரப்பு பேச்சு
இரட்டை இலை சின்னம் முடக்கம் ஏன்? என திண்டிவனத்தில் சசிகலா பரபரப்பாக பேசினார்.;
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மன்னார்சாமி கோயில் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார். அவர் பேசுகையில் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை 3வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுத்தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அ.தி.மு.க. சின்னாபின்னமாகி வருகிறது.
உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது? தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வில் நடப்பதை பார்த்து தி.மு.க.வினர் ஆனந்தமாக உள்ளனர். சிலர் உயர் பதவியில் நீடிப்பதற்காக சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டார்கள். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலைச் சின்னம் முடங்கி உள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பத்திற்கு கட்சியின் சட்ட விதிகளை மாற்ற, யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வின் சட்டத்திட்டங்களில் திருத்தம் செய்ய எந்த தொண்டரும் விரும்பவில்லை என்றார்.