புறம்போக்கு நிலத்தில் மாட்டுத்தீவன விதை தூவிய விழுப்புரம் கலெக்டர்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புறம்போக்கு இடங்களில், மாடுகளுக்கு தீவினமாகும் விதைகளை கலெக்டர் விதைத்தார்.;
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம், ஒலக்கூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் கால்நடை தீவனப்புல் விதைப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில், கால்நடை தீவன ரகங்களான கொழுக்கட்டை புல், முயல் மசால் உள்ளிட்ட உயர்ரக தீவின விதைகளை, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், தூவி விதைத்தார். திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆர்.சங்கர், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை தா.மனோகரன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.