திண்டிவனத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2021-08-31 15:16 GMT

திண்டிவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டிவனம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபரியும் தாெழிலாளர்கள் டி.ஏ. வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சங்க நிர்வாகி இராமதாஸ் தலைமையில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க முற்படும் மத்திய அரசை கண்டித்தும், மாநில அரசு டி.ஏ போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக காேஷங்களை எழுப்பினர். ஆர்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News