திண்டிவனம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதலால் போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றிருந்த வாகனத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-09-06 12:42 GMT

பைல் படம்.

சென்னையை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சென்னையில் இருந்து பென்னாடத்திற்கு மினி லாரியில் டைல்ஸ் ஏற்றி கொண்டு சென்றார். திண்டிவனம் சலவாதி அருகே சென்ற போது லாரியின் ஆக்சில் கட்டாகி 9 மணி அளவில் நடுரோட்டில் நின்றது. லாரியை ஓரத்தில் நிறுத்தாமல் அவர் ரோட்டில் நின்று கொண்டு பிரச்சினையில் ஈடுபட்டார். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோல மதுரை பாலமேடு சேர்ந்தவர் முன்னாள் டி. ஆர். ஓ. அவரது குடும்பத்தினர் 20 பேருடன் தன் பேத்தி சடங்கு நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வண்டியை மதுரை பாலமேடு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (55)மினி வேனை ஓட்டிக்கொண்டு கொண்டு வந்தார்.

அப்பொழுது மினி லாரி ரோட்டில் நின்று கொண்டிருந்ததால் வேனுக்கு முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் முன்னாள் டி.ஆர்.ஓ. சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் கண்ணாடி முழுவதும் நொறுங்கி ரோட்டில் விழுந்தது. வேனில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மினி லாரியை போலீசார் ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

Similar News