திண்டிவனத்தில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

திண்டிவனத்தில் உள்ள ரயில் பாதையை கடக்க சுரங்க பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் எம்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர்;

Update: 2021-10-28 14:05 GMT

துரை,ரவிக்குமார் எம்.பியிடம் கோரிக்கை மனு அளித்த வியாபாரிகள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை,ரவிக்குமார் எம்.பியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில், மேம்பாலத்தின்கீழ் உள்ள ரயில் பாதையைக் கடப்பதற்கு வசதியாக சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

மனுவை பெற்று கொண்ட எம்.பி ரயில்வே அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த கோரிக்கையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க செய்வதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News