தடுப்பு இல்லாததால் வீணாகும் திண்டிவனம் ராஜாங்குளத்து நீர் -மக்கள் வேதனை

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ராஜா குளம் நீர் தடுப்பு இல்லாததால் வந்த வழியே வெளியேறும் அவல நிலை - மக்கள் குற்றச்சாட்டு

Update: 2021-11-21 05:55 GMT

(கோப்பு படம் ) திண்டிவனம் ராஜாங்குளம் நீர்

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் ராஜா குளம் நீர் தடுப்பு இல்லாததால் வந்த வழியே வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி பகுதியில் ராஜாங்குளம் உள்ளது, இந்த குளம் மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் ராஜா குளம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது, இந்நிலையில் நிரம்பி வழிந்த நீரை தடுப்பு கட்டைகள் மூலம் தடுத்து நீரை தேக்கி வைக்கும் வசதி தற்பொழுது உடைக்கப்பட்டு விட்டது, இதனால் குளத்திற்கு எந்த வழியாக மழைநீர் வந்து நிரம்பியதோ, தற்போது மீண்டும் வந்த வழியே நீர் வெளியேறி வருகிறது, ஒர நாளில் 4 அடி நீர் மட்டம் குளத்தில் குறைந்துவிட்டது, என குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர், அதனால் மிச்சமிருக்கும் நீரையும் காப்பாற்றி வைக்க வேண்டுமென்றால், குளத்தின் நீர் வரும் பகுதியை பலகை கொண்டு அல்லது மணல் மூட்டைகள் கொண்டு தடுத்து நிறுத்தினால் குளத்தில் இருக்கும் நீரை தேக்கி வைக்க முடியும், இல்லையென்றால் நீர் வந்த வழியே வெளியேறிவிடும், அதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ராஜாங்குளத்து நீரை தேக்கி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.  

Tags:    

Similar News